உதகை சிஎஸ்ஐ சிஎம்எம் பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகளை ஆட்சியர் வழங்கினார்

நீலகிரி மாவட்டம், உதகை, சி.எஸ்.ஐ சி.எம்.எம் மேல்நிலைப்பள்ளியில் இன்று சுகாதாரத்துறையின் சார்பில், பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “நமது மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கம் தினம் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் இம்மாதம் 10 மற்றும் 17ம் தேதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் 543 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 167 தனியார் பள்ளிகள் மற்றும் 486 அங்கன்வாடி மையங்களிலும் பயிலும் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை மதிய உணவிற்குப் பிறகு ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. 1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மி சிரப் மற்றும் 2 வயது முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு ஒரு முழு மாத்திரையும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதம் 10-ம்தேதி பள்ளிக்கு வராத விடுபட்ட மாணவ, மாணவியருக்கு இம்மாதம் 17ம் தேதி குடற்புழுநீக்கும் மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரத்த சோகையை தடுக்கும் இந்த தேசிய குடற்புழு நீக்கும் திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் மொத்தம் 1,42,225 மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவர்.” என்றார். 

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற முதிமொழிக்கேற்ப மாணவ, மாணவியர்கள் இதுபோன்ற மருத்துவ முகாம்களை பயன்படுத்தி தங்கள் உடல் நலத்தினை நோய்வாய்படாமல் காத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி திறந்தவெளியில் மலம் கழித்தல் தீமையினை தங்கள் பெற்றோருக்கும், உறவினருக்கும், தங்கள் சுற்றுத்தாருக்கும் தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் மாணவ, மாணவியர்களிடமிருந்து வெளிப்படும் ஒரு கருத்து பொது கருத்தாக எதிரொலிக்கும்.

அதேபோல உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று நோயினை நிவர்த்தி செய்து கொள்ளலாம். பணக்கஷ்டம் ஏற்பட்டால்கூட பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் நம்மில் ஒழுக்கம் கெட்டுப்போனால் வாழ்க்கையே கெட்டுபோய்விடும். எனவே இன்றைய மாணவ, மாணவியர்கள் இச்சமுதாயத்தின் எதிர்கால தூண்கள் என்பதை நினைவிற்கொண்டு ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” எனப் பேசினார். 

இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...