விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்- திமுக மாநில விவசாய அணி அமைப்பாளர் பேட்டி


விவசாயிகள் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என திமுக மாநில விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம் பேட்டியளித்துள்ளார்.

விவசாய விரோத கொள்கையை கடைபிடிக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக மாநில விவசாய அணி அமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், கொ.ம.தே.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்று விவசாய விரோத கொள்கையை மத்திய மாநில அரசுகள் கடைபிடிப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திமுக மாநில விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக், சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் பொங்கலூர். பழனிசாமி, திமுக உயர்மட்டக் குழு உறுப்பினர் கண்ணப்பன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம் கூறியதாவது:-

விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சியினரிடம் ஆதரவு கேட்கப்பட்டு கடந்த 30-ம் தேதி முதலமைச்சரை சந்தித்து விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலான்மை வாரியம் அமைக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து முறையிடப்பட்டது. அப்போது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழா உரையில் விவசாயிகள் சார்ந்த எந்த ஒரு அறிவிப்பும் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. 



உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...