திமுக தலைவர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 1500 பெண்களுக்கு சில்வர் குடங்கள் வழங்கிய திமுக அமைப்பு செயலாளர்

திமுக தலைவர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 1500 பெண்களுக்கு சில்வர் குடங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று வழங்கினார்.



திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற பவள விழா, கோவை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட அலுவலகத்தில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசுகையில், திமுக ஆட்சியின்போது 2006-ல் இலவசமாக கேஸ் இணைப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து, 11 ஆண்டுகளாக இலவச கேஸ் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது, இந்த திட்டம் ரத்தாகி உள்ளது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என்ற நிலை மீண்டும் வரப்போகின்றது.

ரேஷன் பொருட்கள் ரத்து, குடிநீர் பிரச்சனை என பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பிரச்சனைகள் தெருமுனை பிரச்சாரங்கள் மூலம் மக்களுக்கு திமுக மகளிரணியினர் கொண்டு செல்ல வேண்டும். விரைவில் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்கு பெண்கள் தயாராகிக் கொள்ள வேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 1,500 பெண்களுக்கு சில்வர் குடங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...