கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் புதிய ஆம்புலன்ஸ் வசதி இன்று துவக்கம்


கோவை, சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் புதிய ஆம்புலன்ஸ் வசதி இன்று துவங்கப்பட்டது. இதனை கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.



இது குறித்து அவர் பேசுகையில்; கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவசர காலத்திற்கு பயன்படும் வகையில் 108 இலவச அவசர சிகிச்சை ஊர்த்தி இன்று தொடங்கப்பட்டுள்ளது. விபத்துகளில் உள்ள நோயாளிகளின் உடலை ட்ரான்ஸ்போர்ட் செய்வதற்கான அனைத்து வசதியும் இந்த புதிய ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்டுள்ளது. சாலை விபத்திலோ அல்லது மற்ற இடங்களில் ஏற்படும் விபத்திலோ நேரில் சென்று நோயாளிகளை காப்பாற்றுவதற்கான பிரத்தியேக ஸ்டக்ச்சர் வசதி கொண்டுள்ளது. மேலும், இதில் கழுத்தில் ஏற்படும் விபத்துக்கு நெக் பிளாக், காலில் ஏற்படும் காயங்களுக்கு வீல் சேர் வசதிகள் உள்ளது.



மேலும், அவசர தேவைக்கான அனைத்து முதலுதவி மருந்துகளும், ஆக்சிஜன் சப்ளை மற்றும் அனைத்து கருவிகளையும் சார்ஜ் செய்யும் வகையில் டிசி கரண்ட் சப்ளை வசதிகள், ஜெனரேட்டர் வசதி, குளுக்கோ மீட்டர் போன்ற முக்கிய கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.



இதில், ஒரு வாகன ஓட்டுனர் மற்றும் அவசர தொழில்நுட்பவியலாளர் உள்ளனர். இவர்கள் நோயாளிகளின் உயிரை பாதுகாக்க உதவுகின்றனர். எனவே, விபத்து ஏற்பட்டுள்ள சுழ்நிலையில், நோயாளிகளின் உயிரை காப்பாற்ற இந்த புதிய ஆம்புலன்ஸ் வசதியை 108 எண் மூலமாக பொதுமக்கள் அழைக்கலாம். இந்த புதிய ஆம்புலன்ஸ் வசதியை ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி.



இவ்வாறு கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...