சிஐஐ கோவை மண்டலம் சார்பில் "கட்டிடம் நுண்ணறிவு தொழில் நுட்பங்கள்" குறித்து கருத்தரங்கு

சிஐஐ கோவை மண்டலத்தின் சார்பில் நடைபெற்ற 17-வது மாநாட்டில் "கட்டிடம் நுண்ணறிவு தொழில் நுட்பங்கள்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், கட்டிடத் துறையில் உற்பத்தி செயல்திறன் மற்றும் தொழில்நுட்பங்கள், நுணுக்கங்கள், உற்பத்தி அமைப்பில் அறிவார்ந்த நிறுவனங்களை உருவாக்குவதன் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பிரதான விருந்தினராக மைன்ட்ரீ லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிருஷ்ணகுமார் நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "எதிர்காலம் நுண்ணறிவு நிறுவனத்திற்கு சொந்தமானது. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் போன்ற சிக்கலான தொழில்நுட்பங்களை நிறுவனங்களே கையாள வேண்டும். அதனால் வளர்ச்சி அடைவது மற்றும் தொழில்நுட்பத்தில் செழிப்பும் ஏற்படும் என்றார். 

இதனைத்தொடர்ந்து பேசிய சிஐஐ கோயம்புத்தூர் மண்டலத்தின் தலைவரான எஸ்.நாராயணன் கூறுகையில், இந்த நிகழ்வானது உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை புரிந்து கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு தளமாக விளங்குகிறது என்றார்.

பின், ராபர்ட் போஷ் இன்ஜினியரிங் மற்றும் பிசினஷ் சொல்யூஷன்ஸ் துணைத் தலைவர் ஸ்ரீராம் டிவி உரையாற்றியதைத் தொடர்ந்து, கேஜி இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி பி.ஜெயமுரளி நன்றியுரையாற்றினார்.

மாநாட்டில், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், அமேசான் இணைய சேவைகள் பிரைவேட் லிமிடெட், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், ராபர்ட் போஷ் பொறியியல் மற்றும் வர்த்தக தீர்வுகள் போன்ற முன்னணி தொழிற்துறைகளிலிருந்து 200-க்கும மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...