'இந்தியாவை அடித்துக் கொல்லாதே!' எஸ்.டி.பி.ஐ கட்சியின் மக்கள் பிரச்சார இயக்க பேரணி

இந்தியாவை அடித்துக் கொல்லாதே என்ற கோஷத்தை முன்வைத்து நாடு முழுவதும் 2017, ஆகஸ்ட் 1 முதல் 25 வரை எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மக்கள் பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரமானது நோட்டீஸ் வழங்குதல், தெருமுனைப் பிரச்சாரம், ஆன்லைன் பெட்டிஷன், சுவர் விளம்பரம், போஸ்டர், பொதுக்கூட்டங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து போத்தனூர் சாலை வரை எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக மாபெரும் பிரச்சார இயக்கப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ரபீக் அகமத் கொடியசைத்து துவக்கி வைத்தார். எஸ்.டி.பி.ஐ கட்சி கோவை மண்டல தலைவர் முஸ்தபா தலைமை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட தலைவர் அன்சர் ஷெரிப் மற்றும் மதிய மாவட்ட தலைவர் அப்துல் காதர், மேற்கு மாவட்ட தலைவர் சையது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இபெரனியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.  



இப்பேரணியின் இறுதியில், எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலத் துணைத் தலைவர் ரபீக் அகமத் பேசுகையில்; இந்தியா ஒரு குடியரசு என்பதில் இருந்து அடித்து கொல்லும் தேசமாக மாறிவருகிறது. பசு பாதுகாவலர்கள் என்று தங்களை அழைத்து கொள்பவர்கள் அடித்துக் கொல்லுதல் என்பதை உருவாக்கி "பசுவினால் பசுக்காக" என்று முஸ்லீம்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையினரை தாக்கி படுகொலை செய்து வருகிறார்கள். மத்திய மற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகளின் துணையோடு, இந்த பசு பயங்கரவாதிகள் பல அப்பாவிகளைக் கொன்று, நூற்றுக்கணக்கான குடும்பங்களை அளித்து விட்டார்கள்.



மாட்டிறைச்சி என்பது பெரும்பாலான இந்தியர்களின் சாதாரண உணவாகும். அது மலிவான ஊட்டச்சத்தை கொடுக்கும் உணவாகும். பல்வேறு மாநிலங்களில் உயர்ஜாதி இந்துக்கள் கூட மாட்டிறைச்சியை சாப்பிடுகிறார்கள். 



இந்த நிலையில் புனிதமான பசு என்ற போர்வையில் கொடூரச் செயலை செய்து கொண்டிருகிறார்கள். அதற்காக முஸ்லிம்களையும், தலித்களையும் குறிவைத்து அடுத்துக் கொல்வதன் மூலம் அவர்களின் மனதில் பீதியை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலை மாற வேண்டும். இந்த தீவிர வெறியர்களின் பிடியில் இருந்து அப்பாவி மக்களையும், தேசத்தையும் பாதுகாக்க, அமைதியை விரும்பும் இந்தியர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றார். 



Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...