கோவையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் மாட்டின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொள்வதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் "கொன்றது ஆர்.எஸ்.எஸ் நான் சாட்சி" என்ற முழக்கத்தை முன்வைத்து கொடூர கொலைகளுக்கு எதிரான இந்தியா என்ற தலைப்பில் தேசம் தழுவிய பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. 



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் வைத்து இந்தியாவில் மாட்டின் பெயரால் நடைபெறும் கொலைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்று சாட்சி பகரும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இப்போராட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட்டின் கோவை மாவட்ட தலைவர் கே.பீர் முஹம்மது தலைமை தாங்கினார். மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் மாநில பொதுச் செயலாளர் எல்.அப்துல் ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட்-யின் மாநில பொருளாளர் என்.எம்.ஷாஜஹான், நேஷனல் வுமன்ஸ் ஃப்ரண்ட் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆயிஷா சித்திகா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். 



இப்போராட்டத்தில் மாட்டின் பெயரால் நடைபெறும் அனைத்து கொலைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என கோசங்கள் எழுப்பப்பட்டன. சாட்சி பகரும் விதமாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பொது மக்களும் கலந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக சாட்சி கூறினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...