17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தம்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியினை கைவிட வேண்டும். வங்கிகள் இணைப்பு முயற்சியை கைவிட வேண்டும். கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வராக்கடன்களை வசூல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி முன்பாக அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட வங்கிகளில் 95 சதவிகித வங்கி பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 2000 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் 20,000 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏறபட்டு இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் தொடர்போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...