காட்டு நாய்களால் வேட்டையாடப்பட்ட மான்- இறைச்சியை கைப்பற்றிய வேட்டையர்கள் கைது

கோவை மாவட்டம், மாங்கரை அடுத்துள்ள வனப்பகுதியில் பல்வேறு வகையான மான்கள், யானைகள், காட்டு நாய்கள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.

இந்நிலையில், நேற்று அந்த வனப்பகுதியில் காட்டு நாய்கள் ஒரு சாம்பார் மானை வேட்டையாடியுள்ளன. அதனைக் கண்ட மூன்று வனவிலங்கு வேட்டையர்கள் காட்டு நாய்களை துரத்திவிட்டு மானின் இறைச்சியை எடுத்து வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மூன்று வேட்டையர்களையும் மான் இறைச்சியுடன் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த வேட்டையில் ஈடுபட்டது மாங்கரை பகுதியைச் சேர்ந்த எஸ்.அன்பழகன், என்.முருகன் மற்றும் பி.ரமேஷ் என்பதும், காட்டுநாய்களால் வேட்டையாடப்பட்ட சாம்பார் மானின் இறைச்சியை வெட்டி எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, இதில் ஈடுபட்டோர் மீது வனபாதுகாப்பு சட்ட விதிமுறைகளின் படி தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...