கோவை வழியாக வரும் அக்டோபர் 1ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை சென்னை எக்மோர் - எர்ணாகுளம் மற்றும் எர்ணாகுளம் - சென்னை எக்மோர் வரையும், எர்ணாகுளத்தில் இருந்து யஸ்வந்த்பூர் மற்றும் பனஸ்வாடிக்கும் கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

அதன்படி, சென்னை எக்மோரில் இருந்து எர்ணாகுளத்துக்கு வரும், 26ம் தேதி மற்றும் செப்டம்பர் 2ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எக்மோரில் இருந்து இரவு 11:40 மணிக்கு புறப்படும் ரயில், கோவைக்கு மறுநாள் காலை 6:45 மணிக்கு வந்தடைகிறது. எர்ணாகுளத்திற்கு காலை 10:45 மணிக்கு செல்கிறது. 

அதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து வரும் 22, 29-ம் தேதிகள், செப்டம்பர் 12, 19, 26-ம் ஆகிய தேதிகளில் சென்னை எக்மோர்க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6:30-க்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8:00 மணிக்கு சென்னை செல்கிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு 11:45-க்கு வந்தடைகிறது. 

எர்ணாகுளத்தில் இருந்து யஸ்வந்த்பூருக்கு செப்டம்பர் 9, 13, 20, 27ம் ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்படும் ரயில், அலுவா, பாலக்காடு, கோவை, திருப்பூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 4:30 மணிக்கு யஸ்வந்த்பூர் சென்றடைகிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு, 8:25 மணிக்கு வந்தடைகிறது. 

எர்ணாகுளத்தில் இருந்து பனஸ்வாடிக்கு வரும் 27ம் தேதி, செப்டம்பர் 3, 10 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இரவு 8:15 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பத்தூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 8:00 மணிக்கு பனஸ்வாடி சென்றடைகிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு 12:45 மணிக்கு இந்த ரயில் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...