வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட்டில் ஒற்றை காட்டு யானை தாக்கி வேலுச்சாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் கடந்த ஒருவார காலமாக ஒற்றை காட்டு யானை மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.



இந்நிலையில் இன்று கருமலை எஸ்டேட் பகுதியில் நேற்றைய தினம் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக அப்பகுதியில் உள்ள மயான பகுதிக்கு ஊர்பொதுமக்கள் அனைவரும் சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென்று அருகே உள்ள காட்டிற்குள் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென அனைவரையும் துரத்தியுள்ளது.

இதில் வேலுச்சாமி (62) என்பவரை தனது துதிக்கையால் இழுத்த யானை தொடர்ந்து அவரை மிதித்து கொன்றது. இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனிடையே, தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து வராத வனத்துறையினரைக் கண்டித்து அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நேரில் வரும்வரை உடலை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த விடமாட்டோம் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.



மேலும் உயிரை பலிகொண்ட காட்டு யானை அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒற்றை காட்டு யானையை உடனடியாக கும்கி யானை வரவழைத்து பிடிக்கவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...