கோ- இந்தியா பவுண்டரிகளில் செயல்படும் நிறுவனங்களால் விவசாயம் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

சூலூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் கோ- இந்தியா பவுண்டரிகளில் உள்ள சில நவீன முறையில் இயங்காத பவுண்டரிகளினால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுவதாக அரசூர் மற்றும் பொத்தியம்பாளையம் பகுதி மக்கள், விவசாயிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

சூலூர் பகுதியில் செயல்பட்டு வரும் கோ- இந்தியா பவுண்டரியின் உள்ளே பல பவுண்டரிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முறையாக செயல்படுவதில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை. புகை போக்கிகளால் வரும் புகை நேரடியாக பாதிக்கிறது. 

குறிப்பாக, பவுண்டரிகளில் பயன்படுத்தப்படும் மண் மற்றும் இரசாயனக் கழிவுகள் மழைநீரில் கரையும் வகையில் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. பவுண்டரிகளில் இருந்து வெளிவரும் மழைநீர் முற்றிலும் கெட்டு சூரமடை ஓடை மற்றும் குட்டை பரமசிவன் கோவில் ஓடை, குட்டையில் கரிய நிறத்தில் கலக்கிறது. இதனால், அக்கழுதியைச் சுற்றியுள்ள விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில் செடிகளின் மீது கரிய மண் படிந்துள்ளதால் கால்நடைகளை உணவிற்காக விடமுடியவில்லை.

எனவே, கோ- இந்தியா பவுண்டரிகளில் முறையாக நவீன முறையில் இயங்காத பவுண்டரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். திறந்த வெளியில் பிற இடங்களில் கொட்டியுள்ள கழிவுகளை நிர்வாகமே திருப்பி எடுத்து விட வேண்டும். கோ- இந்தியா தவிர மற்ற பவுண்டரிகளுக்கு அனுமதி ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...