தொண்டாமுத்தூரில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைத்த தமிழக அரசிற்கு மாணவ, மாணவியர்கள் பாராட்டு

தமிழக அரசால் தொண்டாமுத்தூரில் புதிய பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டதற்கு மாணவ, மாணவிகள் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் 70 ஆண்டுகால எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருபாலர் பயிலும் புதிய பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை கடந்த ஆகஸ்ட் 6ம் தேதியன்று திறந்துவைத்தார்.



மேலும், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டுப்பாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கோவை ஆர்.எஸ்.புரத்தில் அன்னைதெரசா மகளிர் கல்லூரியும் என கடந்த ஓராண்டில் கோவை மாவட்டத்திற்கு மட்டும் 4 கல்லூரிகள் மற்றும் பல்லடம் பகுதியில் ஒரு கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த கல்வியாண்டில் இக்கல்லூரிகளானது புதிய கட்டிடத்திற்கு புதிய பொழிவுடன் மாற்றப்பட்டு கூடுதல் பாடப்பிரிவுகளை சேர்த்து, இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கோவை தொண்டாமுத்தூரில் அமைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தமிழக அரசிற்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...