மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி போராட்டம்


நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட சமூக நீதிகளுக்கான வழக்கறிஞர் குழுவினர், தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு ஆதரவாக, கண்ணில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு பேரணி நடத்தினர். செஞ்சிலுவை சங்கத்தை நோக்கி நடத்தப்பட்ட இந்த பேரணியின் போது, நீட் தேர்வால் மாணவியின் உயிரை பறித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



மேலும், நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வில் இருந்து  தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 



இதனிடையே, அனிதாவின் தற்கொலைக்கு நீட் தேர்வு மட்டுமே காரணமா என தெரியவில்லை என்று கூறிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு இந்த பேரணியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மருத்துவரான அவர், மருத்துவ மாணவர்களுக்கு எதிராக செயல்படுவது போல, தனது கருத்தை தெரிவிக்கலாமா..? எனவும் சமூக நீதிகளுக்கான வழக்கறிஞர் குழுவினர் கேள்வி எழுப்பினர்.



Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...