தமிழகத்தில் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்த தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால் தள்ளிப்போனது. தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் தேர்தலை நடத்துவதற்கு காலதாமதமாகியது.

இதுவரை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இத்தேர்தலுக்கான அட்டவணையை வரும் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு பொதுநலன் வழக்கு அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில், ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கும் 'நோட்டீஸ்' அனுப்ப ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...