நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது


அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12-ஆம் வகுப்பில் 1,176 மதிப்பெண் பெற்றிருந்தார். இவரது மருத்துவ கட்ஆப் 196.75 ஆக இருந்தது. எனினும் நீட் தேர்வில் இவரால் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றதால் இவருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் மனமுடைந்த அனிதா தனது வீட்டினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில், மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கோவை ரயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 



தொடர்ந்து, அக்கட்சியை சேர்ந்த சசிகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- மத்திய அரசு சட்டத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற மெத்தனப்போக்கில் உள்ளது. கழிப்பிட வசதி கூட இல்லாத கிராமங்களும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உள்ள தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராவது சாதியமில்லை. தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு சிதைத்து வருகிறது. அதற்கு உதாரணமே அனிதா-வின் தற்கொலை.

இந்த தேர்வை ரத்து செய்யவில்லை என்றால், தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...