நாளை முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் - 6 போக்குவரத்து விதிகளை மீறினால் உரிமம் ரத்து

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் நாளை (புதன்கிழமை) முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. இது அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் உடன் வைத்திருப்பது சாத்தியம் இல்லை என்று தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

இதனால், புதன்கிழமை முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இதனை நாளை (புதன்கிழமை) முதல் தீவிரமாக அமல்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

தமிழகத்தில் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்கிற நடைமுறை வந்தது எப்படி என்பது பற்றி போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஒவ்வொரு மாநிலத்திலும் விபத்து மரணங்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உச்சநீதிமன்ற  வழிகாட்டுதலின்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அடிக்கடி கூடி ஆய்வு செய்வார்கள்.

அப்போது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், செல்போனில் பேசிய படியே வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றி செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகள் செல்வது போன்ற 6 விதி மீறல்களே உயிரிழப்புகளுக்கு கூடுதல் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டியதுதானே என்கிற கேள்வியும் உச்சநீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது.

இந்த பிரச்சனை பற்றி விவாதிக்கும் போது அசல் ஓட்டுநர் உரிமத்தை யாரும் கையில் வைத்திருப்பது இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னரே அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் கையில் வைத்திருக்க வேண்டும் என வழிகாட்டுதல் குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி நாளை (புதன்கிழமை முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.

இந்த விதி மீறலில் ஈடுபடுவோரை மட்டுமே அதிகமாக சோதனை செய்து அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்போம். அதற்காக மற்றவர்களுக்கு விலக்கு எதுவும் கிடையாது. அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். இந்த விதி மீறல்களில் ஈடுபடுவோரின்  ஓட்டுநர் உரிமம் குறைந்தது 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...