அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்



நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.  மாணவியின் இந்த மரணம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 5-வது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாணவி அனிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



சென்னையில், நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரி மாணவர்கள் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து இன்று (செப்.,5) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு காவல் துறையினர் அவர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்தப் போராட்டத்தில், திரைப்பட இயக்கநர் கவுதமன் மற்றும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்தனர். 



இதே போன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்ததனர். மத்திய, மாநில அரசுகள் தாமதப்படுத்தாமல் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை விலக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.



சென்னையின் பரபரப்பான மவுண்ட் சாலையில் வரும் நந்தனம் ஒய்எம்சிஏ கல்லூரி மாணவர்களும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டக் களத்தில் இறங்கினர். மாணவர்கள் ஒன்று திரண்டால் மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்பதால் போராட்டத்தில் இறங்கியுள்ள மாணவர்கள் நீட் என்னும் கொடுந்தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்றனர். 

வேளச்சேரியில் உள்ள குருநாநக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தினுள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு தடை விதிக்கும் வரை போராட்டம் ஓயாது என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 



அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பேரணியாக சென்ற மாணவர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...