நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போத்தனூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினர்

நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரயலூர் மாவட்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, கோவை மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் இன்று போத்தனூர் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, எஸ்டிபிஐ கட்சியினர் ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்து கோவை - பாலக்காடு பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த ரயில் முற்றுகைப் போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் முழக்கமிட்டனர்.



இதனைத்தொடர்ந்து, இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த போராட்டம் காரணமாக கோவை - பாலக்காடு ரயில் சில நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...