"நதிகளை மீட்போம்" பிரச்சாரக் குழுவினருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு - நதிகளை மீட்கும் பேரணிக்கு விவசாய சங்கத்தலைவர்கள் ஒருமித்த ஆதரவு

அழிந்து வரும் நதிகளை மீட்டு, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய "நதிகளை மீட்போம்"  என்னும் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் உருவாகியுள்ளது. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, நதிகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 30 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்தப் பேரணியில், சத்குரு நாடு முழுவதும் தாமே சுமார்  7,000 கி.மீ. தூரம் வாகனம் ஓட்டிசெல்கிறார். அவரோடு, வழியில் பொதுமக்களும், பல தலைவர்களும், பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். இந்த பயணம்  அக்டோபர் 2ம் தேதி தில்லியில் முடிவடைகிறது. இந்த விழிப்புணர்வு பேரணி 16 மாநிலங்களின் வழியாக செல்லும். 20க்கும் மேற்பட்ட நகரங்களில் பிரச்சார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், 16 மாநிலங்களின் முதலமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.



தமிழகத்தில் கோவை, மதுரை, கன்னியாகுமாரி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மேலும், புதுச்சேரி மற்றும் சென்னையிலும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.  



இந்த நிலையில், கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய "நதிகளை மீட்போம்" விழிப்புணர்வு பயணம்  இன்று (செப்.,6) திருச்சியை வந்தடைந்தது. அதிகாலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர், திருச்சி மாவட்ட  காவேரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை சத்குரு சந்தித்து உரையாடினார். இதில், தமிழக விவசாயிகளின் நிலை குறித்தும், பிரச்சனைகளுக்கான ஆக்கப்பூர்வமான தீர்வுகள் குறித்தும் பேசப்பட்டது.

பின்னர், ஓயாமாரி சாலையில் காவேரி கரையில் நடந்த "நதிகளை மீட்போம்" நிகழ்ச்சியில் சத்குருவுடன், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த பேரணிக் கூட்டத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார்,  மாவட்ட ஆட்சியர் இராஜாமணி, அருட்தந்தை லெனார்டு பெர்னான்டோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதில், கோலாகலமான இசை நிகழ்ச்சியும் அரங்கேறியது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தனியார் நிறுவனங்கள், ராணுவ வீரர்கள் என பலதரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



பின்னர், நடந்த "நதிகளை மீட்போம்" நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு பேசுகையில், 12,000 வருடங்களாக விவசாயம் செய்த பூமி இது. இந்த பூமி வளமாக இருக்க மரக்கழிவுகள் பூமியில் விழ வேண்டும். கால்நடைகள் இருக்க வேண்டும். இப்போது, இவை இரண்டும் இல்லாமல் நம் மண்ணின் வளத்தை இழந்து கொண்டு வருகிறோம். 15% குறைவான விவசாயிகள் தான் தனது அடுத்த தலைமுறை விவசாயம் செய்ய வெண்டும் என்று விரும்புகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் நம் மண்ணின் வளம் குறைந்து விட்டது. இந்நிலையை நாம் மாற்ற வேண்டும் என்றார்.



சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் பேசுகையில், காவேரி தாயை வணங்குகின்ற பல நிகழ்வுகளை நான் கண்டிருக்கிறேன். இன்று காவேரியை காணும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. வரலாறு காணாத வகையில் காவேரி வற்றி வருகிறது. இவ்வளவு காலம் யாரும் நிகழ்த்தாத ஒரு சாதனையை சத்குரு கையில் எடுத்துள்ளார். மௌன புரட்சியாக சத்தமில்லாமல் பசுமை கரங்கள் மூலமாக 3 கோடி மரங்கள் நட்டு பசுமை போர்வையை உயர்த்தியுள்ளார். நதிகளை மீட்க சத்குரு எடுத்திருக்கும் இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். ஏனெனில், இதுவரை ஈஷா மையம் எடுத்துள்ள அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைந்துள்ளது. இந்த இயக்கத்திற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவோம் எனக் கூறினார்.

அமைச்சர் வளர்மதி பேசுகையில், நீர் இன்றி உலகில்லை என்ற நிலை மாறி, உலகிற்கு நீர் இல்லாத நிலை வந்து விட்டது. சத்குரு அவர்கள் வழிகாட்டியாய் இருக்க நாம் அனைவரும் கைகோர்த்து நம் நதிகளை மீட்டு எடுப்போம். உலகிற்கு சத்குரு வழங்கும் யோகா ஒரு வழிகாட்டியாய் இருக்கிறது. மேலும், ஈஷா பசுமை கரங்கள் பல கோடி மரங்கள் நட்டு பசுமை வழிகாட்டியாய் இருந்து வருகிறது. இந்த திட்டம் இனிதாய் நடக்க நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார். 



இறுதியில், விழா மேடையில் சிறப்பு விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...