மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து- உயிருக்கு ஆபத்தான நிலையில் மூன்று வயது குழந்தை



பெரிய நாயக்கன்பாளையம் அருகே சொகுசு காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று வயது குழந்தை உட்பட மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பெரியநாயக்கன் பாளையம் லக்‌ஷ்மி மெஷின் வொர்க்ஸ் அருகே சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது, அந்த கார் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி பெரும்விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்தம்பதியினர் மற்றும் மூன்று வயது குழந்தை படுங்காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தோர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் அதிகளவில் வெளியேறியுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்தோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், காரை ஓட்டிவந்தவர் மது போதையில் இருந்ததாகவும், வேகமாக காரினை இயக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இவர்தான் வண்டியை ஒட்டி வந்தவர்   









Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...