அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் கூடுதல் வைப்புத்தொகை- கோவை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக துணை விதிகளின்படி 01.10.2013 முதல் அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்பட உள்ளது என்று கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக துணை விதிகளின்படி 01.10.2013 முதல் அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. முந்தைய கோவை மாநகராட்சி பகுதிகளில் 01.10.2013-க்கு முன்னர் வீட்டு உபயோக குடிநீர் இணைப்பு பெற்ற இணைப்புதாரர்கள் கூடுதல் வைப்புத்தொகையாக ரூ.4000, வீட்டு உபயோகமல்லாத குடிநீர் இணைப்பு பெற்ற இணைப்புதாரர்கள் ரூ.7000 செலுத்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு அனைத்து இணைப்புதாரர்களுக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், 01.10.2013-க்கு முன்னர் இணைப்பு பெற்று அறிவிப்பு கிடைக்கப் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர்களை அணுகி கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனவே 15.09.2017-க்கு முன்னர் அறிவிப்பில் உள்ளவாறு கூடுதல் வைப்புத்தொகை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...