ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பினர் ஒருநாள் வேலைநிறுத்தம்

ஒரே தேசம், ஒரே வரி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி. வரி) கடந்த ஜுலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கக் கோரி கோப்மா எனப்படும் பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பினர் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் சிவானந்த காலனி அருகே உள்ள பவர் ஹவுஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



போராட்டம் குறித்து பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பின் தலைவர் மணிராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மத்திய அரசின் அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரியை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், விவசாயத்திற்கு மூலப்பொருளான பம்ப்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பது, அவர்களை மேலும் தற்கொலைக்கு தூண்டும் செயலாக அமைந்துள்ளது. எனவே, வரி விதிப்பின் உச்சவரம்பை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பினரின் இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தால், கோவையில் 3,000 கடைகள் மூடப்பட்டுள்ளன. 

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...