சோமனூர் பேருந்து நியைல விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் ஆறுதல் கூறிய அமைச்சர்

கோவை மாவட்டம் சோமனூர் பேரூராட்சி பேருந்து நிலைய மேற்கூறைப் பகுதி கான்கிரிட் சுவர் எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பத்தினர்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

கோவை மாவட்டம் சூலூர் வட்டம், சோமனூர் பேரூராட்சி பேருந்து நிலைய மேற்கூரையின் பகுதி கான்கிரிட்ட சுவர் எதிர்பாராத வகையில் வியாழனன்று விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு ஆண்கள், 3 பெண்கள் என ஐந்து நபர்களின் குடும்பத்தினர்களையும், படுகாயமடைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.



இதனைத்தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் கூறியதாவது:-

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், சோமனூர் பேரூராட்சியிலுள்ள பேருந்து நிலைய மேற்கூரையின் பகுதி கான்கிரிட் சுவர் இடிந்து அதன் கீழ் நின்று கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் இரண்டு ஆண்கள் 3 பெண்கள் உட்பட ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.



மேலும், முதலமைச்சர் இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிதியுதவித் தொகைகளும் உடனடியாக வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். 

தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் படுகாயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி, மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பா.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், எட்டிமடை ஏ.சண்முகம், அம்மன் கே.அர்ச்சுணன், ஆர்.கணகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் அசோகன், உள்ளிருப்பு மருத்துவர் சௌந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...