நீலகிரியில் கோழிப்பண்ணை, வீட்டுதோட்டம் அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கோழிப்பண்ணை, வீட்டுதோட்டம் ஆகியவை அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழங்குடியின மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் வெவ்வேறு இடங்களில் கோழிப்பண்ணை மற்றும் வீட்டுத்தோட்டம் அமைக்க மாவட்ட ஆட்சியர் அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கரிக்கையூர், பங்களாபடிகை ஆகிய பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு கோழிபண்ணை வைப்பதற்கான இடத்தையும், கடினமாலா ஊராட்சிக்குட்பட்ட கோத்திமுக்கு பகுதியில் வாழும் பழங்குடியினருக்கு வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான இடத்தினையும் ஆய்வு செய்தார்.

மேலும், பழங்குடியினரிடையே இத்திட்டத்தைப்பற்றி எடுத்துக்கூறி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மெட்டுக்கல்  பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உணவு இருப்புகள் மற்றும் சமையலறையையும், மற்றும் பங்களாபடிகை ஊராட்சி ஒன்றியபகுதியில் உள்ள துவக்கப் பள்ளியையும், சோலூர் மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) பழனிசாமி, உதவி இயக்குநர் (கிராம ஊராட்சி) மேகநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...