தமிழக அரசை கண்டித்து ஆசிரியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்

வால்பாறை ஸ்டான்மோர் பிரிவில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பு மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் சார்பாக 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (07.09.2017) இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அதுவரை, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும், சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.



இதில், 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த வால்பாறை போலீஸார்,  தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துவிட்டு பின்னர் விடுவித்தனர். 

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...