அரசின் நிவாரணத் தொகையை வாங்க மறுப்பு - சோமனூர் விபத்தில் உயிரிழந்தவரின் வீட்டில் இருந்து வெளியேறிய எம்எல்ஏ.

கோவை மாவட்டம் சோமனூரில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தின் மேற்கூரை வியாழக்கிழமை மதியம் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி தாரணி, அரசு பேருந்து நடத்துனர் சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு கட்டிடம் தரமில்லாமல் கட்டியதே காரணம் என பொதுமக்களும், இறந்தவர்களின் உறவினர்களும் குற்றம்சாட்டினர். 

இதனை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

மேலும், விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூற நேரில் சென்றார். அப்போது, பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் அமைச்சரை முற்றுகையிட்டதால் அவர் அங்கிருந்து உடனடியாக புறப்படும் நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த கோம்பக்காடு புதூரை சேர்ந்த கல்லூரி மாணவி தாரணியின் இல்லத்திற்கு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் சென்று அரசு தரப்பில் வழங்கப்பட்ட ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். 

அதனை ஏற்க மறுத்த மாணவியின் உறவினர்கள், அரசின் மெத்தன போக்காலும், தரமில்லாத கட்டிடத்தால் இந்த உயிரிழப்பு எற்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. 

இதனால், சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ், கருமத்தம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் மகாலிங்கம், அரசு அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...