பதவி மற்றும் பணத்தை பாதுகாப்பதில் மட்டுமே தமிழக அரசு குறியாக உள்ளது - சு.ப.உதயகுமார் குற்றம்சாட்டு

கோவை ரயில்நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கத்தில் ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் அரசின் அடக்குமுறையை கண்டித்து கண்டன கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப.உதயகுமார், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவி வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,  கூடங்குளம் அணு உலையில் உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் மக்களுக்கு வீடுகள் கட்டுவதில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது.  இந்த ஊழல் புகார்கள் குறித்து விசாரணை முறைப்படி நடத்த வேண்டும். அணு உலையை சுற்றி லட்சக்கணக்கான மக்கள் வசிப்பதால் மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகள் விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

தொடர்ந்து, அவர் பேசியதாவது :-  நீட் தேர்வு என்பது குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவம். ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.  இத்தேர்விற்கு எதிராக சென்னையில் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்திற்கு வரவேற்கத்தக்கது.  நீட், ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்டவற்றிக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வந்தாலும், தமிழக அரசு மக்களை பற்றி கவலைப்படாமல் பதவி நாற்காலிகளையும், சேர்த்து வைத்துள்ள பணத்தை பாதுகாப்பதில் மட்டுமே குறியாக உள்ளது. இவ்வாறு உதயகுமார் குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...