"கோ கிரீன் கோவைபுதூர்" கோவையில் முதன் முறையாக 42 கி.மீ. மராத்தான்


கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான மாரத்தான் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 42 கி.மீ. தொலைவு முழு மாரத்தான் போட்டியை கோவைபுதூர் ரன்னர்ஸ் கிளப், கோவைப்புதூர் ஆர்கிட் கேட்டேட் கம்யூனிட்டி ராகிண்டோ ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) கோவையில் நடத்தியது. 



பல்வேறு சமூக நலன்களுக்காக பல்வேறு விதமான மாரத்தான் போட்டிகள் கோவை நகரில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற இந்த 42 கி.மீ. தொலைவு மாரத்தான் கோவையில் நடைபெற்ற முதல் தொலைதூர மாரத்தான் போட்டியாகும். இந்தப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், முதியோர், பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் பங்கேற்றனர். இவர்களுக்கு 5 கி.மீ. 10 கி.மீ. 21 கி.மீ. 42 கி.மீ. பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. பசுமையான கோவைபுதூரை உருவாக்குவதுதான் இந்தப் போட்டிகளின் பிரதான நோக்கம் என்கின்றனர் இதன் ஒருங்கிணைப்பாளர்களான சி. ராஜசேகர், விக்னேஷ், சரவணன், பிரபு, பீட்டர், ஸ்.கவிப்ரியா, ரீனா, மாயா, பிரிஸில்லா, மேரி ஆகியோர்.

கடந்த சில ஆண்டுகளாக கோவைபுதூர் தனது பசுமையை இழந்து வருகிறது. இதற்கு வேகமான நகரமயமாக்கலே முக்கியக் காரணமாக உள்ளது. பசுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் சுமார் 1300 பேர் பங்கேற்றனர். போட்டிகளில் எட்டு வயது குழந்தை முதல் 80 வயது முதியோர் வரை பங்கேற்று, ஓடினர். மேலும், கென்யா நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றனர். போட்டிகளில் பங்கேற்றோருக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 



போட்டிகளை போட்டி ஒருங்கிணைப்பாளர்களும், திமுகவை சேர்ந்த வீ. அறுமுகப்பாண்டி ஆகியோர் துவக்கி வைத்தனர். லையன்ஸ் கிளப்பை சேர்ந்தவர்கள் 5 கி.மீ. தொலைவு மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தனர். 



கோவைபுதூரில் துவங்கிய இந்தப் போட்டிகள், சிபிஎம் கல்லூரி, பஞ்சாரா ஹில்ஸ், ஜெ.ஆர்.டி ஹில்ஸ் ஆகியவை வழியாக சென்றன. இந்தப் போட்டியில் பங்கேற்றோருக்கு டீ-சர்ட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியின் இலக்கை வெற்றி கரமாக எட்டிய நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்றோருக்கு 1.8 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் டி.எம். அன்பரசன், நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.பி.கிருஷ்ணகுமார், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வெற்றி பெற்றவர்களை கௌரவித்தனர்.

42 கி.மீ மாரத்தான் போட்டியில் முதல் பரிசை 2.49.40 வினாடிகளில் கடந்து வினோத் குமாரும், இரண்டாம் பரிசை 2.54.53 வினாடிகளில் கடந்து பீட்டரும் மூன்றாம் பரிசை டி.சிவா வென்றார்கள். 21 கி.மீ மாரத்தான் போட்டியில் 1.13.04 வினாடிகளில் கடந்து பி.நாகேஷ் முதல் பரிசையும், 1.16.27 வினாடிகளில் கடந்து மைக்கேல் டிவோட் இரண்டாம் இடத்தையும், மூன்றாம் பரிசை கிருஷ்ணராஜ் வென்றார்கள். 21 கி.மீ பெண்கள் பிரிவில் 1.35.00 வினாடிகளில் கடந்து முதல் பரிசை எஸ்.பத்மாவதியும், 2.10.09 வினாடிகளில் கடந்து இரண்டாம் பரிசை எஸ்.தாரனியும், மூன்றாம் பரிசை என். கார்த்திகாவும் வென்றனர்.

10 கி.மீ ஆண்கள் போட்டியில் 38.15 நிமிடங்களில் கடந்து முதல் பரிசை நரேஷ் குமாரும், இரண்டாம் பரிசை சசி குமாரும், மூன்றாம் பரிசை பிரபுவும் வென்றனர். பெண்கள் பிரிவில் 1.46 நிமிடங்களில் கடந்து ஆர்.சினேகா முதல் பரிசையும், ஏ. தமிழ்அரசி பரிசையும் எம். தூனியா மூன்றாம் பரிசையும் வென்றனர்.

5 கி.மீ ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை எஸ்.கிருபாகரனும், இரண்டாமிடத்தை சஞ்சய்யும், மூன்றாமிடத்தை ஹேமந்த்தும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் கார்த்திகா முதல் இடத்தையும், சுவாதிஸ்ரீ இரண்டாமிடத்தையும், மூன்றாமிடத்தை எஸ்.மாலனியும் பிடித்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...