தொடர் கனமழையால் குன்னூர் தரைப்பாலம் சேதம் - போக்குவரத்து பாதிப்பு

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை. ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இந்த நிலையில்,  கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் எனப்படும் மரப்பாலம் உடைந்தது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மேட்டுப்பாளையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. தரைப்பாலத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால், சில மணி நேரங்களில் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  



குன்னூர் தாலுக்காவில் பல இடங்களில் பெய்து வரும் கனமழையால், மண் சரிவும், மரங்களும் விழுந்துள்ளதால் போக்குவரத்து லேசாக பாதிக்கப்பட்டுள்ளது. துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். 

மேலும், கனமழை காரணமாக, குன்னூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மண்சரிவின் காரணாக ஊட்டி- குன்னூர் இடையே மட்டும் மலை ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் இயக்கப்படுகிறது

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...