மாணவி அனிதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும், அரசியல்வாதிகள் பல கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன், மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிப்பதாக டுவிட்டர் பக்கத்தில் கூறி இருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் மாணவி அனிதாவின் வீட்டிற்கு இன்று (11.09.2017) நேரில் சென்று,  அனிதாவின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார். நடிகர் விஜயின் இந்த வருகை அனிதா குடும்பத்திற்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த குழுமூர் கிராமத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எவ்வித போலீசார் பாதுகாப்பும் இன்றி தனது நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் விஜய் மிக சாதாரணமாக வருகை தந்தது பொதுமக்களை திகைப்பில் ஆழ்த்தியது.



மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள், தன்னார்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயின் இந்த திடீர் விஜயம், மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினி, கமல்ஹாசனை தொடர்ந்து மக்கள் சார்ந்த பொது பிரச்சனைகளில் நடிகர் விஜயின் தொடர் பங்களிப்பு தமிழக அரசியல் சூழ்நிலையில் வேறுவிதமாக பார்க்கப்படுகிறது.



Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...