இங்கிலாந்து ராணியிடம் வாழ்த்து பெற்ற கோவை சிறுமி


தனது தொடர் சாதனைகளுக்காக இங்கிலாந்து ராணியிடம் கோவையை சேர்ந்த சிறுமி வாழ்த்து பெற்றுள்ளார் கோவையை சேர்ந்த 8 வயது சிறுமி தர்ஷினி. கோவை பி.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், இவரது மகள் தர்ஷினி, கணுவாய் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். 

ஸ்கேட்டிங் விளையாட்டில் பலே கில்லாடியான இவர் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். 



மேலும், 41 நிமிடங்களில் 10.5 கி.மீ தூரம் ஸ்கேட்டிங் செய்து "ஆசியா சாதனையாளர்கள் புத்தகம்"(Asia book of records) புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இந்த சாதனையை தொடர்ந்து, கடந்த ஆண்டுக்கான ‘பிரைட் ஆப் தமிழ்நாடு’ விருதினை பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்பது இந்த சாதனைச் சுட்டியின் எதிர்கால லட்சியமாக உள்ளது. 

தர்ஷினியின் சாதனைகளை செய்தித்தொகுப்பாக சிம்ப்ளிசிட்டி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தனது சாதனைகளை ஒரு கடிதம் மூலம் இங்கிலாந்து மகாராணிக்கு அனுப்பியுள்ளார் தர்ஷினி. 



இதைப்பார்த்த ராணி, தர்ஷினியின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தனது கையொப்பமிட்டதுடன் தனது இரு புகைப்படங்களையும் தர்ஷினிக்கு பரிசாக அனுப்பியுள்ளார்.





Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...