ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்


புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு அலுவல் பணிகள், பள்ளிக் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் இன்று 6-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.



முன்னதாக, செவ்வாயன்று (நேற்று) ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...