நீட் தேர்விற்கு விலக்குகோரி கோவையில் திமுக தலைமையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் காரணமாக 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவ படிப்பிற்கு 196 கட் ஆப் பதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போன அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து, அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக தலைமையில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள்விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய அரசிற்கு எதிராகவும், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக அரசிற்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவப் படிப்பை பாதிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டன.



திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு திமுக பொறுப்பாளர் முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...