குடிபோதையில் வாகன தணிக்கை செய்த கோவை போலீஸ்காரர்


கோவை மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருபவர் கார்த்திக் (39). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மருத்துவ விடுப்பில் சென்றாதத் தெரிகிறது. இந்த நிலையில், அவர் மரக்கடை பகுதியில் நின்று வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, வாகனத் தணிக்கைக்காக நின்றிருந்த பொதுமக்கள் கார்த்திக்கின் பேச்சால், குடிபோதையில் இருப்பதாக சந்தேகமடைந்தனர். அவரிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்ததில் மது அருந்தியதை, அவர்கள்  உறுதி செய்தனர். 

பின்னர், இது தொடர்பாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார், குடிபோதையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் கார்த்திக்கை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

இதைத் தொடர்ந்து,  இது தொடர்பான மருத்துவ அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமர்பிக்க உள்ளனர். போலீஸ் அதிகாரி கார்த்திக் மது அருந்தியது மருத்துவ அறிக்கையில் நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும எனத் தெரிகிறது. மேலும். பணி விடுப்பில் இருக்கும் போது, இவ்வாறு நடந்து கொண்டாரா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கோவையில் மது போதையில் வாகனத் தணிக்கை செய்த போலீஸ்காரரால், உள்ள சக போலீசார் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...