சோமனூரில் தொடங்கியது ஆய்வு : எட்டப்படுமா தீர்வு ?


சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதனைத்தொடர்ந்து, பேருந்து நிலைய கட்டிடம் கட்டியதில் ஊழல் இருப்பதாக பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் சோமனூர் பேருந்து நிலைய விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியான ககன் சிங் பேடி தலைமையில் தனி நபர் விசாரணை குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில், இது போன்ற சம்பவங்கள் வரும் காலகட்டத்தில் நடைபெறாமல் இருக்க ககன்சிங் பேடி கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 15) விசாரணையினை துவங்கினார்.

முன்னதாக, இன்று காலை கோவை வந்த ககன் சிங் பேடி, விபத்து நடந்த சோமனூர் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அங்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவினருடன் ஆய்வினைத் தொடங்கினார். 

இடிந்து விழுந்த பேருந்து நிலைய மேற்கூரையின் மீதுள்ள இரும்பு கம்பிகள் மற்றும் கான்கிரீட்-ன் நிலைப்பு தன்மையினை ககன்சிங் பேடி ஆய்வு செய்து வருகிறார். உடன் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்றுள்ளார்.



ஆய்வு முடிந்த பின்னர், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...