விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஊதியம் வழங்கலாமா ? நடிகர் கமல் கேள்வி

ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ எனப்படும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பினர் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, வேலைநிறுத்ததை கைவிடா விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த தமிழக அரசு, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என அறிவித்தது.

இந்த நிலையில், விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஊதியம் வழங்கலாமா..? என நடிகர் கமல்ஹாசன் இன்று (15.09.2017) வெளியிட்டுள்ள டுவிட்டில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும், அரசு ஊழியர்கள் வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் கிடையாது என்று சொல்லப்படும் போது , குதிரை பேரத்தில் ஈடுபடும் விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு எப்படி ஊதியம் வழங்கலாம்?. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்களது பணியை புறக்கணிக்கும் எம்எல்ஏக்கள் மீதும் நீதிமன்றம் இது போன்ற எச்சரிக்கையை விட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...