டிரைவிங் லைசன்ஸ் உடன் ஆதார் இணைப்பா?

ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க திட்டமிட்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.



டிஜிட்டல் ஹரியானா மாநாடு-2017 நிகழ்ச்சியில் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில் டிரைவிங் லைசன்ஸ் உடன் ஆதார் இணைப்பது குறித்த அறிவிப்பினை வெளியிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், "ஓட்டுநர் உரிமத்தை ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசின் சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி உடன் பேசியுள்ளேன். பான் கார்டு மற்று வங்கி கணக்குகளுடன், ஆதார் எண்ணை இணைத்தது பண மோசடிகளை தடுப்பதற்காகவே.

டிஜிட்டல் அடையாளம் தொழில்நுட்ப உதவியுடன் உடல் அடையாளங்களை ஆதார் உறுதி செய்கிறது. இது சிறந்த அரசாங்கம் மற்றும் அதிகாரமளித்தலுக்கு முக்கிய கருவியாக உள்ளது. டிஜிட்டல் அரசாங்கமானது மிகவும் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படும்" என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, ஆதார் எண் பல்வேறு விவகாரங்களுக்கு கட்டாயமக்கப்பட்டு வருவதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துவரும் இச்சூழ்நிலையில் மக்களின் போராட்டம் மற்றும் பாதுகாப்புத் தண்மையை கண்டுகொள்ளாமல் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், வங்கி, பான், கேஸ், தொலைபேசி எண் என அனைத்து தனிமனிதர் உரிமையினையும் பரிக்கும் வகையிலேயே இந்த ஆதார் உள்ள நிலையில் தற்போது ஓட்டுநர் உரிமத்துடனும் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...