கோவை மத்திய சிறையில் கடந்த மூன்று வாரங்களில் 5 கைதிகள் பலி

கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்றுள்ள 1,800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சமீப காலங்களாக சிறையில் இருக்கும் குற்றவாளிகள் உடல்நலக்குறைவால் பலியாவது அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி ஆயுள் தண்டனை கைதியான அந்தோனி ஆனந்த் (43) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து, மோசடி வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்றிருந்த குருசாமி (59) என்பவர் கடந்த 1-ம் தேதி பலியானர்.

இந்த சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்த மாணிக்கம் (57), நாராயணசாமி (70)  ஆகியோர் கடந்த 3 மற்றும் 10-ம் தேதி உடல்நலக்குறைவால் பலியாகினர். இந்த நிலையில், இன்றும் (16.09.2017) ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கைதான ராமசாமி (83) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  சிறையில் இருந்த ராமசாமிக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறை காவலர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 3 வார காலங்களில் சிறை கைதிகள் 5 பேர் பலியாகி இருக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறையில் முதலுதவி மற்றும் உணவு வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுகிறதா? என்ற கேள்வி அவர்களிடையே எழுந்துள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...