தூய்மையே சேவை என்ற இயக்கப் பேரணி கோவை மாவட்ட ஆட்சியரால் துவக்கம்

கோவை மாவட்ட சூலூர் ஊராட்சி ஒன்றியம், அரசூர் ஊராட்சி ஊத்துப்பாளையம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தூய்மையே சேவை இயக்கத்தின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார்.



தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு சாலையோர குப்பைகளை துப்புறவு செய்யும் பணியினை ஆட்சியர் துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-



தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மையே சேவை என்ற இயக்கம் தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கமானது கடந்த 15.09.2017 முதல் 02.10.2017 வரையில் நடைபெறவுள்ளது. இந்த இயக்கத்தின் நோக்கமானது, தூய்மை பாரத இயக்கம் சார்ந்தப்பணிகளை அனைத்து நிலைகளிலும் முடுக்கிவிடுதல், தூய்மை பாரத இயக்கத்தினை ஆற்றல் மிக்கதாக மாற்றுதல், சுகாதாரத்தினை பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தி மேலும் வலுவூட்டுதல். மற்றும் ஒவ்வொரு இந்திய பிரஜையும், இப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து பொது மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், உள்ளுர் முக்கிய பிரமுகர்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர்கள் மூலம் பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.



வீடுகள், சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும் துப்புறவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்பினரால் சுத்தமாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மாவட்ட நிர்வாகத்தால் சுகாதாரத்தினை பேணிக்காக்கின்ற வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

முன்னதாக, சூலூர் ஊராட்சி ஒன்றியம், அரசூர் ஊராட்சி, ஊத்துப்பாளயைம் கிராமத்தில் வீடுகளில் இரட்டை உறிஞ்சு குழலுடன் கூடிய கழிப்பறை கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சந்திரசேகரன், உதவி செயற்பொறியாளர் சுப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ், ஜெயஸ்ரீ உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...