ஸ்மார்ட் ரேசன் கார்டில் காஜலைத் தொடர்ந்து விநாயகர் படம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்தது. இது பெரிய சர்ச்சையானதை அடுத்து, அப்பெண்ணிற்கு மாற்று ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. இந்த பிரச்னை அடங்குவதற்குள் திருப்பூரிலும் இதே போன்ற ஒரு குழப்பம் நடந்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் ஊராட்சியை சேர்ந்த விவசாயி நல்லசிவம்(47). இவர் குடியிருக்கும் பகுதிக்கான ரேஷன் கடை சுங்காரமடக்கில் உள்ளது. ஸ்மார்ட் ரேஷன் கார்டு வந்துள்ளதை கேள்விப்பட்ட நல்லசிவத்தின் மனைவி சுமதி, சுங்காரமடக்கு ரேஷன் கடைக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டை வாங்க சென்றார். கூட்டம் அலைமோதியதால் ஸ்மார்ட் ரேஷன் கார்டை சரிபார்க்காமல் வாங்கி வந்துள்ளார்.

பின்னர், வீட்டிற்கு வந்து, ஸ்மார்ட் ரேஷன் கார்டை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதில் குடும்ப தலைவர் புகைப்படம் அச்சிடப்படவேண்டிய இடத்தில் விநாயகர் சுவாமி படம் இருந்தது. ஆனால் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பெயர்கள் சரியாக இருந்தன. அந்த ரேஷன் கடைக்கு சென்று விவரம் கேட்டார். ரேஷன் கடை ஊழியர் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் இ-சேவை மையத்திற்கு சென்று படத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.

இதேபோல, தர்மபுரி மாவட்டம் போசிநாயக்கன அள்ளி பகுதியில் மகேஷ் சின்னசாமி என்பவரது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் புகைப்படம் இருக்க வேண்டிய பகுதியில் செருப்பு அணிந்த கால் புகைப்படம் இடம் பெற்று இருந்தது. வேறு ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவரின் படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. 

அரசு வழங்கும் ஸ்மார்ட் ரேசன் கார்டில் இதுபோன்ற புகைப்படங்கள் மாறி வருவதை தடுக்க, அதிகாரிகள் கவனமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...