காந்திபுரம் பேருந்து நிலையத்தில் “தூய்மையே சேவை” இயக்கப் பணிகள் துவக்கம்

கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் “தூய்மையே சேவை” இயக்க பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் அனைத்து மக்களையும் பங்கு பெறும் வகையிலும், அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தும் வகையிலும், சுகாதாரம் ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையிலும் “தூய்மையே சேவை” இயக்க பணிகள் மாநகராட்சி சார்பாக செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன் தொடக்கமாக கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் சுத்தம் செய்யும் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.



இந்த இயக்கத்தின் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நிலை உருவாக்குதல், கழிவறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்டுதல். அனைத்து பொது இடங்களிலும் சுத்தம் செய்தல். பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், சுற்றுலா மற்றும் வழிபாட்டு தளங்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.



மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த “தூய்மையே சேவை” இயக்க பணிகளுக்கு அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கி, தங்கள் சார்ந்த அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்து கொள்ளுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுகுட்டி, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...