ஆவாரம்பாளையம் பேருந்து நிலையத்தில், ஆபாத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஃபளக்ஸ் பேனர்.

கோவை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் சிரமப்படுத்திவருகிறது. அதேபோல், கடும் காற்று மற்றும் மழையால் சேதமடைந்த பல ஃபளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே தலைக்கு மேல் தொங்கியபடி பொதுமக்களை அச்சுருத்திவருகிறது. கணபதி அருகே அமைந்திருக்கும் ஆவரம்பாளையம் பேருந்து நிலையத்தில் தே.மு.தி.க சார்பில் வைக்கப்பட்டிருக்கும் ஃபளக்ஸ் பேனர், குறிப்பிட்ட காலத்தில் அகற்றபடாததால், பழத்த மழையால் சேதமடைந்து, துருப்பிடித்த பிடித்துஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.



பயனிகள் பேருந்துக்காக இந்த பேனருக்கு கீழ்தான் காத்திருக்கின்றனர், இரவு நேரங்களில் நடந்து செல்பவர்களுக்கு பேனர் அவிழ்ந்து விழும் நிலையில் தொங்குவதே தெரியாது. உடனடியாக இவை அகற்றபடாவிட்டால் பொதுமக்களை பெருமளவு பாதிக்கும் என்று எச்சரிக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் ரவி.



தினமும் அந்த சாலையை கடக்கும் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் வெகுவிரைவாக அந்த பேனரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.



போட்டோக்கு போஸ் கொடுத்து, சிரித்தமுகத்தோடு தம் தலைவர்களை வாழ்த்தி வணங்குவதில் இருக்கும் ஆர்வம், மக்கள் நலனில் இல்லை என உணர்த்துகிறது சாய்ந்து முறிந்த இந்த ஃபளக்ஸ் பேனர்கள்.  

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...