கோவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வனவிலங்கு வாரக் கொண்டாட்டம்

கோவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வனவிலங்கு வாரம் எனும் நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு போட்டிகளை நடத்த கோவை வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். வரும் அக்டோபர் முதல் வார ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் போட்டிகளை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக, மாவட்ட வனத்துறை அதிகாரி என்.சதிஷ் எழுதியுள்ள கடிதத்தில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு 3 விதமான போட்டிகள் நடத்தப்படும். வனம் மற்றும் விலங்குகள் குறித்த வினாடி, வினா, விலங்குகளை பாதுகாப்பது தொடர்பான ஓவியப் போட்டி மற்றும் வனவிலங்குகள் குறித்த பேச்சுப்போட்டி நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமே வினாடி வினா போட்டி மற்றும்  வனவிலங்குகள் குறித்த பேச்சுப்போட்டிக்கு தகுதியுடையவர்கள். விலங்குகளை பாதுகாப்பது தொடர்பான ஓவியப் போட்டி பல்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில் 6 குழுக்களாக நடத்தப்படும். 

வனவிலங்கு வாரக் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் வரும் 21-ம் தேதிக்குள் பெயர் பட்டியலை சமர்பிக்க வேண்டும். வாரந்தோறும் போட்டியில் பங்கேற்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை வடகோவையில் உள்ள தமிழக வனத்துறை கழக வளாகத்திற்கு வரவேண்டும். 

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட வன அலுவலகம், கோவை - 0422 - 2456911

எஸ்.சுரேஷ், வனஅதிகாரி, கோவை - 9047066460

எம்.செந்தில், வனஅதிகாரி, மதுக்கரை - 9994449248

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...