ராம்நகரில் குழாய் உடைந்ததால் சாலையில் தேங்கிய குடிநீர்

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ராம்நகர் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். டவுன் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்து நிலையம் அருகிலேயே இருப்பதால், எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.



இந்நிலையில், ராம்நகரில் உள்ள செங்குப்தா வீதியில் குடிநீர் குழாய் உடைந்ததால், தண்ணீர் வெள்ளம் போல சாலையில் தேங்கியது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் சுபாஷினி ஈஸ்வர் என்பவர், சாலையில் குடிநீர் வீணாகி கிடக்கும் காட்சிகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். கடந்த வாரம் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியை ஊழியர்கள் சரியாக மூடாததே, குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் என அவர் குற்றம்சாட்டியிருந்தார். 



அந்தப் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மழைக்காலத்தில் நீர் இவ்வாறு தேங்கியுள்ளது. இது போன்ற ஊழியர்களின் அலட்சியத்தால் நீர் வீணாகிக் கொண்டிருந்தால், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவி வந்த கடும் வறட்சியை மீண்டும் சந்திக்க நேரிடும். எனவே, நீரை சேமிப்பது அனைவரின் அத்தியாயக் கடமையாகும். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...