ஈரோட்டில் பல்வேறு ரயில்வே வசதிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோஹிரி திறந்து வைத்தார்

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோஹிரி இன்று ஈரோடு ரயில்நிலையத்தை ஆய்வு செய்ததுடன், ஈரோட்டில் பல்வேறு ரயில்வே வசதிகளை திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர், ஈரோடு ரயில்நிலையத்தில் முன்பிருந்த தண்ணீர் பிரச்சனை தற்போது இல்லை என்றும், தற்போது அனைத்து ரயில்களிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  காவேரி நதியில் இன்று அவர் திறந்து வைத்த நீரேற்று நிலையம் மூலமாக பெறப்படும் தண்ணீர் ரயில்நிலையம், மற்றும் ரயில்வே காலனிகளுக்கு சப்ளை செய்யப்படுவதுடன், உபரி நீர் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக கூறினார்.

ஈரோடு ரயில்நிலையத்தில் மின்தூக்கி மற்றும் நகரும் மின்படிக்கட்டுகள் (Lifts and Escalators) பணி தாமதமாகி வருவதற்கு மண் சப்ளை பற்றாக்குறையும் கட்டுமான ஒப்பந்தக்காரர்களுடன் GST பற்றிய ஒன்றிய கருத்தின்மையுமே காரணம் என்றும், விரைவில் இப்பணிகளை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.  

மேலும், சேலம் கோட்டத்தின் அனைத்து ரயில்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா அமைபதற்கான கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், நிர்பயா நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், அவற்றை பொருத்தும் பணி ரயில்டெல் நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.  

பின்னர், அவர் ஈரோட்டில் உள்ள டீசல் ரயில் எஞ்சின் பணிமனையில் புதியதாக 2.2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருட்கிடங்கையும், காவேரி நதிக்கரையில் 2.8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும் அர்ப்பணித்தார்.  

ஈரோடு ரயில்நிலையத்தில் இருந்து 1326 மெட்ரிக் டன் கோழித்தீவனம் கொண்ட ரயிலை ஈரோடு எஸ்கேஎம் அனிமல் புட்ஸ் நிறுவனம் தனது கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள தொழிற்சாலைக்கு புக்கிங் செய்துள்ள சிறப்பு சரக்கு ரயிலை, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர்  வர்மா, சேலம் கோட்ட கூடுதல் மேலாளர் திரு சந்திரபால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஏ.விஜுவின் மற்றும் இதர சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.    

                              

ஈரோட்டில் இருந்து இம்மாதிரி சரக்கு புக்கிங்  செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். முதல் முறை புக்கிங் செய்யப்பட்ட சரக்கின் மூலமாக ரயில்வேக்கு 12.95 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. எஸ்கேஎம் அனிமல் புட்ஸ் நிறுவனம் இது போன்று ஒரு மாதத்திற்கு சுமார் 7000 மெட்ரிக் டன்கள் புக்கிங் செய்து அனுப்பவும் அதற்காக சாவடிபாளையத்தில் ஒரு புதிய சரக்கு ஏற்றும் முனையத்தை சுமார் 2 கோடி ரூபாய் செலவில் ரயில்வேயுடன் இணைந்து அமைக்கவும் முன்வந்துள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...