அவினாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருச்செங்கோடு கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத் துணைத்தலைவர் ஜேம்ஸ் ராமு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க  டெல்லி செல்வதற்காக கார் மூலம் கோவை விமான நிலையம் வந்து கொண்டிருந்தார். அவரை வழி அனுப்பி வைப்பதற்காக கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் கந்தசாமி உள்பட 6 பேர் உடன் சென்று கொண்டிருந்தனர். 

அவர்கள் வந்த கார், திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தெக்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து (TN 33N2902), காரின் மீது வேகமாக மோதியது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த கந்தசாமி, ஜேம்ஸ் ராமு, கதிர்வேல் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், படுகாயமடைந்த ஓட்டுநர் உள்பட இரண்டு பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். வரும் வழியில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.  இரு கால்களின் தொடை எலும்புகள் முறிந்த நிலையில், ஓமலூர் கொங்கனாபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாலமுருகனுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களில் கந்தசாமி, ஜேம்ஸ் ராமு ஆகியோர் அதிமுக பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, விபத்து நடந்த பகுதியில் கூடிய தெக்களூர் பகுதி மக்கள் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், வேகத்தடை மற்றும் அபாய பாதாகைகளை அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என போலீஸாரிடம் அவர்கள்  முறையிட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...