தூண்டுதலால் நடைபெற்றதா அனிதாவின் தற்கொலை- விசாரணை மேற்கொள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவு

மாணவி அனிதாவின் மரணம் தூண்டுதலின் பேரில் ஏற்பட்ட தற்கொலையா என விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர் சம்பள பிரச்சனை, லீட் வங்கி, தாட்கோ செயல்பாடு குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தற்போது நடைபெற்றது. 

கோவை மாவட்டம் முழுவதும் 96 வழக்குகளில் 348.85 ஏக்கர் பஞ்சமி நிலம் கண்டறியப்பட்டு அது தொடர்பாக நோட்டிஸ் அனுப்பப்பட்டு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி இட ஒதுக்கீடு அனைத்து பள்ளியிலும் வழங்கப்பட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 40 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். மேட்டுப்பாளையம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். மீறினால் ஒப்பந்ததாரர் உரிமம் ரத்து செய்யப்படும். 

கோவை மாநகராட்சியில் தண்ணீர் வரி பிரச்சனையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகை எவ்வளவு தாழ்த்தப்பட்ட பகுதிகளில் செலவு செய்யப்படுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் விசாரணை செய்யப்படும். அரியலூர் மாணவி அனிதா மரணம் தூண்டுதலின் பேரில் ஏற்பட்ட தற்கொலையா என விசாரணை நடத்த ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மனிதாபிமான அடிப்படையில் இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே கோவை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கக் கோரி சமூக நீதி கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, கோரிக்கை குறித்தான மனு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவரிடம் வழங்கப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...