கோவையில் தொழிற்நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் கோவையில் தொழிற்நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அதிகாரிகள் மற்றும் முன்னணி இந்திய தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தில், தொழில்நகரமான கோவையில் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய நகர்புற தொழில்சாலைத்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் தொழிற்சாலைத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோரை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. 



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், அவினாசி அத்திக்கடவு குடிநீர் திட்டம் மற்றும் தொழிற்சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்பட கோவையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும், தற்போது, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடர்பாக அரசு, பங்குதாரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படும். கோவையில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. விரைவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். லாரி பட்டறை வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...