சோமனூர் பேருந்து கட்டிட விபத்தில் காயமடைந்தவருக்கு அரசின் நிவாரணம் கிடைப்பதில் தாமதம் - பணம் செலுத்தாமல் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை மறுப்பு, உறவினர்கள் போராட்டம்

சோமனூரில் பேருந்து கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமைடந்தனர். உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகையாக அறிவித்தார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000, காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்கினார். 

மேலும், பலத்த காயமடைந்தவர்களின் அனைத்து மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. கோவையில் பிரபல தனியார் மருத்துவமனையில் பேருந்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் கால் முறிந்த கல்லூரி மாணவி லதா மற்றும் விவசாயி மாரப்பன் ஆகியோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அனைத்து சிகிச்சைகளும் முடிந்த நிலையில், மாரப்பன் வீடு திரும்பவுதாக இருந்தது. ஆனால், மொத்தம் ரூ.3,30,000 மருத்து செலவில், ரூ.1,50,000 ரூபாய் மட்டுமே அவர் செலுத்தியிருந்தார். இதனால், மாரப்பனை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவ நிர்வாகம் மறுத்தது. எஞ்சிய தொகையை செலுத்தி விட்டு செல்லுமாறும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 



மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மாரப்பனின் உறவினர்கள், மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனையின் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, கால்முறிந்த கல்லூரி மாணவிக்கு அரசு பணி வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 இது தொடர்பாக பிரபல தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரபாத் விவேகானந்தன் பேசுகையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாரப்பனின் மொத்த மருத்துவ செலவு ஐ.3,30,000 ஆகும். மருத்துவமனையில் அனுமதிக்கும் போது ரூ.1,20,000 செலுத்தினார். எஞ்சிய தொகையான ரூ.2,00,000 செலுத்திவிட்டு டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வந்து பார்த்து விட்டு சென்றனர். அப்போது, இங்கேயே சிகிச்சையை தொடருங்கள் எனக் கூறினர். ஆனால்,  மருத்துவச் செலவுகளை ஏற்பது குறித்து எந்த தகவலும் அவர்கள் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...